பைடனுக்கு சவாலாக மாறியுள்ள ஒபாமாவின் மனைவி
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அதிபர் ஜோபைடன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாலும் அவரது வயது மற்றும் உடல்நலம் கருதி அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிட மிட்செல் ஆர்வம்
இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு குவிந்து வருவதாகவும் இதனால் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மிட்செல் ஒபாமாவை அமெரிக்க அதிபர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்று எடுத்த கருத்து கணிப்புக்கு அதிக சதவீதம் வாக்கு மிட்செல் அவர்களுக்கு ஆதரவாக கிடைத்திருப்பதாகவும் எனவே அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக வாய்ப்பு
இதனால் ட்ரம்புக்கு எதிராக ஒபாமாவின் மனைவி மிட்செல் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |