சுதந்திர தின நாளில் தமிழர் தேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்

Sri Lankan Tamils Independence Day Government Of Sri Lanka National People's Power - NPP
By Sathangani Jan 29, 2025 10:00 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கரிநாளாக அனசரிக்க அறைகூவல் விடுப்பதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இயக்கம் இன்று (29.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ம் திகதியினை சிறிலங்கா தேசம் தமது சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றது. ஆயினும் அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள பேரினவாதிகளுக்கு கைமாற்றப்பட்ட தினமாகும்.

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை

ஆட்சி ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி

வரலாற்று ரீதியாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் ஒன்றிணைந்த பகுதிகள், இத்தீவின் மூத்த குடிகளான தமிழ் மக்களின் தாயக பூமியாக இருந்தது என்பதையும், அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித்தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது.

சுதந்திர தின நாளில் தமிழர் தேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல் | Observing Sl Independence Day As A Day Of Mourning

இன்று தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சி ஏறி உள்ள ஜனதா விமுத்தி பெரமுன (JVP) எனும் சிங்கள அடிப்படைவாத கட்சி தம்மை மாற்றத்தின் நாயகர்களாக காட்டி முற்பட்டாலும் அவர்களின் உண்மை முகம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றது.

என்றுமில்லாதவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறியவர்கள் இலங்கைத் தீவின் அதி உச்ச பிரச்சினையான தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எவ்வித அக்கறைகளுமின்றி, ஏன் அவ்வாறான ஒரு பிரச்சினையே இல்லை என்ற கோதாவிலேயே நடந்து வருகின்றனர்.

அத்துடன் சிங்கள பேரினவாதத்தால் இனத்தின் மீதான இனவழிப்பினை மறுதலித்து, அலட்சியத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டதாக கூறுகின்றனர்.

அரசியல் கைதிகள் யாரும் இல்லை என முன்னைய அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களின் போராட்டத்தினை பயங்கரவாதமாகவே சித்தரிக்க முயல்கின்றனர்.

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

கரிநாளாக அனுசரித்தல்

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும், சிங்கள பேரினவாத மூலோபாயம் மாறாது என்பதே நாம் கண்ட அனுபவ பாடம். அதைவிடுத்து இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என நம்புவோமேயானால் எம்மை போன்ற அரசியல் அறிவிலிகள் யாரும் இருக்க முடியாது.

மேலும், இந்த அரசானது இலங்கையர் எனும் அடையாளத்தின் கீழ் தமிழ் மக்களின் தனித்துவத்தை அழித்து சிங்கள மேலாண்மையை நிறுவுவதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சுதந்திர தின நாளில் தமிழர் தேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல் | Observing Sl Independence Day As A Day Of Mourning

மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு வரும் சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை தொடர்ச்சியாக தமிழர் தேசம் கரிநாளாக அனுசரித்தது போலவே இம்முறையும் அனுசரிக்க அறைகூவல் விடுக்கின்றோம்.

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொதுவிடங்கள், கடைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள், எமது வீடுகள் என்பவற்றில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நாளில் உங்களின் உரிமை குரலுடன் சிங்கள அரசுக்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் தேசம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இறையாண்மை உள்ள தனித்தேசமாக மலரும் நாளே தமிழினத்தின் சுதந்திர நாள் என்பதனை மனதில் கொண்டு விடுதலைக்காய் போராட அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டிற்காக நள்ளிரவு முதல் காத்திருக்கும் மக்கள்

கடவுச்சீட்டிற்காக நள்ளிரவு முதல் காத்திருக்கும் மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016