2000 பேரையே புதைக்க இடமுள்ளது - மருத்துவர் விடுத்த அறிவிப்பு
மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடி புதைகுழிகளில் சுமார் 2,000 கொவிட் -19 தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மட்டுமே இடம் உள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்டிலிருந்து கொவிட் தொற்றுநோய் எப்போது அழிக்கப்படும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றும் உறுதியான முடிவுகள் எதுவும் இல்லை, எனவும் அவர் தெரிவித்தார். "பயணக் கட்டுப்பாடு ஓகஸ்ட் 20 அன்று விதிக்கப்பட்டது மற்றும் 3,500 க்கும் மேற்பட்ட COVID நோயாளிகள் தினமும் பதிவாகின்றனர்.ஓகஸ்ட் 24 க்குள் இது 4,000 ஐ எட்டியது," என்று அவர் கூறினார்.
"பயணக் கட்டுப்பாட்டின் முதல் வாரத்தில், COVID தொற்று எண்ணிக்கை 3,000 ஐ எட்டியது. இரண்டாவது வாரம், தொற்று மற்றும் இறப்புகள் மற்றும் ஒக்ஸிஜன் சார்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது," என்று அவர் குறிப்பிட்டார். இவை அனைத்தும் மனித நடமாட்டம் குறைக்கப்பட்டதால் சாத்தியமானது என்றார்.
எனவே, இந்த கொவிட் வைரஸுடன் நாம் வாழ வேண்டும், என்றார்.