உலக கிண்ண வெற்றியணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா...!
2023 ஐசிசி ஒருநாள் உலக கிண்ண தொடரில் ,வெற்றிப்பெறும் அணியின் பரிசுத்தொகையை கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 19 திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
போட்டிகளுக்கான பரிசுத் தொகை
இதில் வெற்றிப்பெறும் அணிக்கு, 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ. 131 கோடி) பரிசுத்தொகை வழங்கப்படும்
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ.65 கோடி) வழங்கப்படும்.
மேலும், உலககிண்ண தொடரில் நடைபெற்ற 48 போட்டிகளுக்குமான பரிசுத் தொகையை கிரிக்கெட் கவுன்சில் முன்னதாகவே அறிவித்திருந்தது.
அரையிறுதியில் தோல்வியடையும் இருவருக்கு தலா 800,000 டொலர் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ. 26 கோடி) வழங்கப்படும். நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெறத் தவறிய மற்ற ஆறு அணிகளுக்கு தலா 100,000 டொலர் (இலங்கை ரூபாவில் ரூ. 3.3 கோடி) வழங்கப்படும்.
ஒவ்வொரு குழு நிலை ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு 40,000 டொலர் (சுமார் ரூ. 1.3 கோடி) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
போட்டி முழுவதும் வெற்றிபெறும் அனைத்து அணிகளுக்கும் மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாவில் ரூ. 329 கோடி) ஐசிசி வழங்கும்.
புள்ளிப்பட்டியல்
ஒக்டோபர் 5-ஆம் திகதி தொடங்கிய ஆடவர் உலக கோப்பையின் 13 வது பதிப்பு நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இதில் 10 அணிகள் கலந்து கொண்டதுடன், 10 போட்டிகளிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
மேலும், அரையிறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |