பணியாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்டது சபாநாயகர் அலுவலகம்
நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் ஐவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்ற உணவுப் பிரிவிலுள்ள ஒருவருக்கும், போக்குவரத்து பிரிவிலுள்ள ஒருவருக்கும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகத்தில் ஒருவருக்கும், பொலிஸார் இருவருக்குமாக ஐவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகம் மற்றும் உணவகம் என்பன மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் இலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை மூடி தொற்றுநீக்கல் செய்யும்படி பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.