கூட்டாக பதவி விலகிய மின் பொறியியல் சங்கத்தின் அதிகாரிகள்
இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் இன்று (21) கூட்டாக பதவி விலகியுள்ளனர்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகாரிகள் நியமனம்
அதன்படி நாளை(22) நடைபெறும் அவசர சிறப்பு கூட்டத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் என்பது தீவிரவாத சங்கம் எனவும், இலங்கை மின்சாரசபைக்குள் முழுமையாக தமது சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்பிய சங்கம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த 19ஆம் திகதி அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தார்.
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான சட்டமூலம்
மூன்று தடவைகள் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான சட்டமூலம் தொடர்பில் அக்குழுவுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போதிலும், அதனில் திருத்தங்களை மேற்கொண்ட போது நாட்டு மக்களுக்கு 8 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டித்தது இந்த சங்கமே என சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இதுவரை காலமும் இலங்கை மின்சாரசபையின் கட்டுப்பாட்டாளரை நியமித்தது இந்த சங்கமே ஆகும், கடந்த ஆண்டிலிருந்து இந்த வாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |