கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Raghav
கீர்த்தி பண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (05.08.2025) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் இடம்பெற்றுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
லொறி ஒன்றில் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சமாகப் பெற்றதன் காரணமாக இவர் இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரி, வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி