பரீட்சை வினாத்தாள்கள் கசிவு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வடமத்திய மாகாணத்தில் தரம் 11 இற்கான தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பதில் அதிபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் அவர் இன்று(04) பிரசன்னப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பதில் அதிபர் 52 வயதுடைய அனுராதபுரம் தம்மென்ன குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவு
இதனிடையே, வினாத்தாள்கள் கசிந்த சம்பவத்தால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு ஒன்றரை மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் பரவுவது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் திகதி குறித்த உப அதிபர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |