வாகன பவனி இன்றி வந்த ஜனாதிபதி அநுர - வரலாற்றில் மாறுபட்ட சம்பவம்
சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று காவல்துறை மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இலங்கையின் (Srilanka) 77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
வாகனங்கள் எதுவும் இல்லை
இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர பாதுகாப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இன்றி வருகை தந்திருந்தார்.
அத்துடன் பிரதமர் மற்றும் விருந்தினர்களும் வந்தபோது, ஒரேயொரு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்ததை அவதானிக்க முடிந்தது.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் தேசிய கீதம்
இதேவேளை, தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் ஆட்சியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
