சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (GCE Ordinary Level exam) பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை திணைக்களம்
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் (Department of Examinations) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என பொது நிர்வாக அமைச்சிடம் கோரிய போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |