யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட முதியவர்!
யாழில் (Jaffna) முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிர்மாய்ப்பு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ள நிவைலயில் அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வந்தமையினால் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனால் மன விரக்தியடைந்த அவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முதியவர் உயிரை மாய்த்து கொள்ளும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளதுடன் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |