147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து (England) அணித்தலைவர் ஒலி போப்(Ollie Pope), 147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார்.
அதாவது வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தனது 49வது போட்டியில் விளையாடிய அவர், ஓவல் (Oval) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
புதிய சாதனை
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது.
Ollie Pope - The first batter in history to score his first seven Test hundreds against different opposition.
— England Cricket (@englandcricket) September 6, 2024
Take a bow, Ollie 🤝 pic.twitter.com/37hYVSfiN2
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ஓட்டங்களே எடுத்த போப், மூன்றாவது போட்டியில் தனது சொந்த மைதானமான ஓவல் மைதானத்தில் விளையாடி, விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
இங்கிலாந்து அணி
இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும்.
POV: You're in the crowd watching Ollie Pope score the fastest Test 150 ever at The Kia Oval 😍📺 pic.twitter.com/z2eLGqTDGV
— England Cricket (@englandcricket) September 7, 2024
இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார்.
இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |