ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவல்!
ஒமிக்ரோன் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையிலேயே இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ´ஒமிக்ரோன்´ வைரஸ் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. கர்நாடகாவில் 2 பேருக்கும், மஹாராஷ்ட்ரா - 10, குஜராத் - 1, டெல்லி - 1, ராஜஸ்தான் - 9 என இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக தற்போது காணப்படுகின்றது.
இந்நிலையில், இந்தத் தொற்று தொடர்பாக தென்னாப்பிரிக்க ஆராய்ச்சி கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஒமிக்ரோன் தொற்று எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கும் என்பதோடு, இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை மாறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.