பாராதூரமான மரணங்களை ஏற்படுத்துமா “ஒமிக்ரோன்” வைரஸ்? ஆய்வில் இறங்கிய உலக சுகாதார ஸ்தாபனம் (காணொளி)
மாறுபட்ட அறிகுறிகளுடன் தென்னாபிரிக்க நாடுகளில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் (Omicron) தொற்று ஏற்பட்டுள்ளதாக கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே (Sudarshini Fernandopulle) தெரிவித்துள்ளார்.
நோயின் பாரதூரத்தன்மை, மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் என்பன தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சாதாரணமாக கொரோனா தொற்றின் போது, தொண்டை வலி ஏற்படுவதுடன், வாசனையை அறிய முடியாத நிலை காணப்படும்.
எனினும், இவற்றை விட மாறுபட்ட அறிகுறிகளுடன் தென்னாபிரிக்க நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது. என்ற போதும், சிகிச்சை முறைமை மற்றும் நோயாளர்களை முகாமைத்துவம் செய்யும் முறைமை என்பனவற்றில் மாற்றமில்லை. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,