இஸ்ரேல் தயாரிப்பு நவீன ரக துப்பாக்கியுடன் சிக்கிய சந்தேகநபர்!
அம்பலங்கொடையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் காசாளர் ஒருவர் நவீன ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்மிமன காவல்துறை சிறப்புப் படை அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பலங்கொடை, கெரமினியவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தத் துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா என்பன கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணை
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட இந்தத் துப்பாக்கி 12 சென்டிமீட்டர் நீளமும், தோட்டா சுமார் ஒன்றரை சென்டிமீட்டர் நீளமும் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பலங்கொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் காசாளராகப் பணியாற்றிய 32 வயது சந்தேக நபர், இந்தத் துப்பாக்கியை ரூ.30,000க்கு விற்க தயாராகியிருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |