ரி56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் அதிரடி கைது
Hambantota
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
T56 துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுங்கம, மமடல பகுதியில் வைத்து குறித்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, ஒரு ரி56 துப்பாக்கி, 63 தோட்டாக்கள், 2 தோட்டா உறைகள், 12-போர் ரக 25 தோட்டாக்கள் மற்றும் 34 ரிவால்வர் தோட்டாக்கள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாகனங்களும் பறிமுதல்
மேலும், இந்த சந்தேக நபர் போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் லொரி மற்றும் கெப் ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்கமவில் வசிக்கும் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி