மடு பரிபாலகர் பெப்பி சோசையுடன் சென்ற குழுவினரில் ஒருவர் விவசாயி மீது தாக்குதல்!
மடு பரிபாலகர் பெப்பி சோசை உள்ளடங்களாக கோயில்மோட்டை வயல்பகுதிக்கு சென்ற ஐவர் அடங்கிய குழுவிலுள்ள நபரொருவர் கோயில்மோட்டை விவசாய அமைப்பின் செயலாளர் யூட் விமல் ராஜ் தாக்கப்பட்டதை அடுத்த பரபரப்பு நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட கோயில்மோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆரம்பத்திலிருந்தே அரச காணியாக உள்ள மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில்மோட்டைக்காணியை பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எங்களுக்கு வழங்க வேண்டுமென உண்ணாவிரத போராட்டம் உட்பட்ட பல போராட்டங்களை பல மாதங்களாக முன்னெடுத்து வந்த விவசாயிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநரால் அண்மையில் நீதி கிடைத்தது.
மேலும் தற்போது சிறுபோக பயிர் செய்கை இடம்பெற்று வருவதால், நீங்கள் குறித்த காணியில் சிறுபோக பயிர் செய்கையை மேற்கொள்ளுங்கள், அதற்கான அரச மானியங்களை உங்களுக்கு வழங்க உத்தரவிடுகிறேன் என ஆளுநர் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இத்துடன் இக்காணி பிரச்சினை முடிவுக்கு வந்ததது, என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரின் உத்தரவைக்கூட மதிக்காமல் மன்னார் மாவட்ட அரச அதிகாரிகளின் துணையுடன் தொடர்ந்தும் மடு தேவாலய பரிபாலகர் பெப்பி சோசை அவர்கள் தான் ஒரு மதகுரு என்பதையும் மறந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் அடாவடிகளில் ஈடுபட்டு தங்களுக்கு பல வடிவங்களில் பிரச்சினைகள் கொடுக்கப்பட்டு வருவதாக கோயில்மோட்டை அப்பாவி கிறிஸ்தவ விவசாயிகள் கவலை வெளியிட்டு வருகினறனர்.
இந்நிலையில்தான் கடந்த திங்கள்கிழமை காலை சில பங்குத்தந்தைகள் பெரியபண்டிவிரிச்சான் – மேற்கு கிராம சேவகர் அலுவலகத்திற்கு வந்து, ஆளுநரின் உத்தரவையும் மதிக்காமல் அங்கிருந்த பாலம்பிட்டி கமநல சேவைகள் உத்தியோகத்தர்களிடம், எங்களுக்கும் கோயில்மோட்டைக்காணியில் சிறுபோகம் (விவசாயம்) செய்ய இடம் தருமாறு கோரியிருந்தனர்.
இந்நிலையில், பங்குத்தந்தைகளுக்கும் - விவசாயிகளுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல பங்குத்தந்தைகள் வேக வேகமாக சென்று விட்டனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மடு பிரதேச செயலக விளையாட்டு மைதானத்தில் மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர் தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் மடு பங்குத்தந்தை மற்றும் கோயில்மோட்டை விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர், உங்களுக்கு ஆளுநரால் காணி வழங்கப்பட்டது தொடர்பில் எனக்கு எந்தவித உத்தரவும் கிடைக்கவில்லையென தெரிவித்ததுடன், விவசாயிகளின் கருத்தை கேட்காமல், காணொளி எடுக்காதீர்கள் என ஊடகவியலாளருடனும் முரண்பட்டு விட்டு இடைநடுவே புறப்பட்டு சென்றுவிட்டார்.
அதனை தொடர்ந்து ஆளுநரின் செயலாளரால் மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தை வெளியிட்டு, மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டு உதவி ஆணையர் உங்களுக்கு ஆளுநரால் காணி வழங்கப்பட்டது.
தொடர்பில் எனக்கு எந்தவித உத்தரவும் கிடைக்கவில்லையென தெரிவித்தது பொய் என்பதை வெளிப்படுத்தியிருந்தனர், அதனை தொடர்ந்து பொய்யுரைத்த அரச அதிகாரியென ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியிருந்தன.
கோயில்மோட்டை விவசாய காணிகளில் சிறுபோக பயிர் செய்கை மேற்கொள்வதற்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்த போது கொரோனா தொற்று காரணமாக பயணத்தடை அமுலில் இருக்கும்.
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்டத்தை கையிலெடுத்து அடாவடியாக குறித்த இடத்திற்கு சில நபர்களுடன் மடு பரிபாலகர் பெப்பி சோசை சென்றிருந்தார்.
குறித்த நேரத்தில் மடு பரிபாலகர் பெப்பி சோசையின் குழுவினருக்கும், கோயில்மோட்டை விவசாயிகளுக்கும் இடையில் வாதி பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிற நேரத்தில், கோயில்மோட்டை விவசாய அமைப்பின் செயலாளர் யூட்விமல் ராஜ் அவர்களை பங்குத்தந்தையுடன் வந்த நபரொருவர் தாக்கினார், இதனால் அங்கு பரபரப்பு நிலைமையொன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.