'ஒரே நாடு - ஒரே சட்டம்' இன்று முதன்முறையாக கூடுகின்றது
sri lanka
people
meeting
One country - one law
By Shalini
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று முதன்முறையாக கூடுகிறது.
குறித்த செயலணி கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் கடந்த 27ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இது 13 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இன்றைய கலந்துரையாடலின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் "ஒரே நாடு - ஒரே சட்டம்" நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டமூலங்களை ஆய்வு செய்து வரைவு செய்யும் பணியை இந்த செயலணி கொண்டுள்ளது.