ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணியின் புதிய திட்டம் - மக்களே! இது உங்களுக்காக...
sri lanka
people
one country one low
By Shalini
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அரச தலைவர் செயலணி, பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.
நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்த ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகக் குறித்த யோசனைகளை முன்வைக்க முடியும்.
நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்க விரும்புவோர் coi.consulations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்ப முடியும்.
அத்துடன், ஒரே நாடு ஒரே சட்டம் அரச தலைவர் செயலணி, அஞ்சல் பெட்டி இலக்கம் 504, கொழும்பு என்ற முகவரிக்குக் குறித்த ஆலோசனைகளை எழுதி, அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.