திருகோணமலையில் பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்!
திருகோணமலை - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று(08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மூதூரை சேர்ந்த (வயது 55) குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
பொது போக்குவரத்துபஸ்ஸில் இருந்து இறங்கி மஞ்சல் கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கில் மோதியதில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

