யாழில் நோயாளர் காவு வண்டி மோதி விபத்து: வர்த்தகர் உயிரிழப்பு
Jaffna
Sri Lankan Peoples
Accident
By Laksi
யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார்.
இதன்போது வடமராட்சி- அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம்
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த குறித்த நபர் தனது வர்த்தக பணிகளை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் நோயாளர் காவு வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி