யாழ்ப்பாணம் மீசாலையில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் பலி!
Jaffna
Accident
By Sathangani
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.
கடவையைக் கடக்க முற்பட்டபோது

மீசாலை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று(22) சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் தொடருந்து கடவைக்கு அருகிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி