தமிழர்களுக்கும் வாய்ப்பு - உறுதிசெய்தார் கோட்டாபய
'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் அரச தலைவர் செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைக்க ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ( Gotabaya Rajapaksa) இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் ( Senthil Thondaman) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnansara Thero) தலைமையிலான இந்தச் செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்ளடக்கப்படாமை தொடர்பில் பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆளும் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளது தலைவர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் பிரஸ்தாபித்திருந்தனர்.
இதன்படி அந்தச் செலயணியை மேலும் விஷ்த்தரித்து, தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாக அரச தலைவர் இதன்போது உறுதியளித்துள்ளதாக செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.