நல்லூர் ஆலய வீதியில் நடந்த அவலம்! ஒருவர் பலி
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka Police Investigation
By Laksi
a year ago
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (23) காலை நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசாரணை
இதன்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டானைச்
சேர்ந்த ஏ.நிஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பெண்ணொருவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்