நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் கடற்றொழிலாளர்களும் முரண்படுவது ஏன்..!

Colombo Cyril Gamini Fernando Fishing
By Shalini Balachandran Feb 23, 2024 05:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி இறங்குதுறையின் உரிமம் தொடர்பில் கடற்றொழிலாளர் சங்கத்திற்கும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

நீர்கொழும்பு - பிட்டிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை தங்களுக்கு வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்திற்கு முன்பாக இந்த வார ஆரம்பத்தில் (2024.02.19) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இறங்குதுறையின் நிர்வாக உரிமை தொடர்பான வழக்கில் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் கடற்றொழிலாளர்களும் முரண்படுவது ஏன்..! | Why Are The Archbishop And The Fisherman At Odds

இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பில் உள்ள புனித பாப்பரசரின் பிரதிநிதிகளிடம் கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்ததோடு, பேராயர் இல்லத்திற் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கைப் பிரஜை : விதிக்கப்பட்டது அபராதம்

மேற்கு இந்தியப் பெருங்கடலில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கைப் பிரஜை : விதிக்கப்பட்டது அபராதம்


என்ன பிரச்சினை ?

2008 ஆம் ஆண்டு, அப்போதைய கொழும்பு பேராயர் ஒஸ்லோல்ட் கோமிஸ், இறங்குதுறையை நிர்வகிப்பது குறித்து விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பிடிபன ஐக்கிய கடற்றொழிலாளர் சங்கம் மீறியுள்ளதாக தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்தார்.

குறித்த இறங்குதுறை அமைந்துள்ள காணி கொழும்பு பேராயருக்கே சொந்தமானது எனவும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தனது பிரதிநிதியை இறங்குதுறையை நிர்வகிப்பதற்கு நியமிக்குமாறும் அப்போதைய கொழும்பு பேராயர் மனுவில் கோரியிருந்தார்.

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் கடற்றொழிலாளர்களும் முரண்படுவது ஏன்..! | Why Are The Archbishop And The Fisherman At Odds

அந்த கோரிக்கைக்கு அமைய, நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் (2024.02.02) அன்று, இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், இறங்குதுறை நிர்வகிக்க பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும், நியமிக்கப்படும் பிரநிதியிடம் சொத்து தொடர்பான கணக்குகள் மற்றும் எஞ்சிய பணத்தை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறையின் உரிமம் கொழும்பு பேராயர்க்கே காணப்படுவதாக கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


இறங்குதுறை அன்பளிப்பாக வழங்கப்பட்டதா ?

1963 ஆம் ஆண்டு, அப்போதைய கொழும்பு பேராயர் அருட்தந்தை தோமஸ் கர்தினால் குரே, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அன்பளிப்பு உரிமை பத்திரம் ஊடாக நீர்கொழும்பு பிடிபன ஐக்கிய கடற்றொழிலாளர் சங்கத்திடம் இந்த இறங்குதுறையை ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய கடற்றொழிலாளர் சங்க நிர்வாகிகள் உரிய அன்பளிப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறி கொழும்பு பேராயரின் முன் அனுமதியின்றி சொத்தின் ஒரு பகுதியையும் கடை அறைகளையும் வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அந்த வருமானத்தை பிடிபன மேசாவில் வசிக்கும் கடற்றொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக செலவிடுவதற்கனெ பிடிபன தேவாலயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மீறி தனி நபர்கள் அந்த வருமானத்தை அனுபவிப்பதாகவும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறை: பேராயரும் கடற்றொழிலாளர்களும் முரண்படுவது ஏன்..! | Why Are The Archbishop And The Fisherman At Odds

எனினும், இறங்குதுறையின் உரிமம் தமக்கே காணப்படுவதாகவும் கத்தோலிக்க திருச்சபையே காணி உரிமத்தை வழங்குவதில் தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசங்க பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.

“1963 ஆம் ஆண்டு காணியை உரிமை பத்திரத்தை எமக்கு எழுதினார்கள். அசல் காணி உரிமை பத்திரத்தை எழுதாமல், அன்பளிப்பு உரிமை பத்திரத்தை எழுதினர். அன்பளிப்பு உரிமை பத்திரத்தை எழுதி நான்கு நிபந்தனைகளையும் விதித்தனர். அது மிகவும் கொடுமையானது. எமது பணத்தில் ஒரு பொருள் வாங்கும் போது அன்பளிப்பு உரிமை பத்திரத்தை கொடுக்க முடியாது. அசல் உரிமை பத்திரத்தை கொடுக்க வேண்டும்.” நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறையின் உரிமையை மீளப் பெற்றுத்தருமாறு கோரியே பேராயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இலாபமீட்டும் இலங்கை! வந்து குவியும் கப்பல்கள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இலாபமீட்டும் இலங்கை! வந்து குவியும் கப்பல்கள்


எவ்வாறெனினும், தற்போது அரசியல்மயப்பட்டுள்ள கொழும்பு பேராயர், நீர்கொழும்பு பிடிபன இறங்குதுறையின் நிர்வாகத்தை பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரசங்க பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹவுதியின் அட்டூழியத்தால் இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்

ஹவுதியின் அட்டூழியத்தால் இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025