யாழில் திடீரென மயங்கி விழுந்த நபரொருவர் உயிரிழப்பு
Batticaloa
Jaffna
Sri Lanka
Heart Attack
By Sathangani
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய முகமதுஹனீபா முகமதுசமீபா என்பவரே நேற்றுமுன்தினம் (22) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒன்றரை வருடகாலமாக யாழ். புத்தூர் பகுதியில் உள்ள விடுதியில் சமையல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாரடைப்பினால் மரணம்
நேற்று முன்தினம் மாலை மூச்செடுப்பதற்கு சிரமப்பட்ட இவர் திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி