பணத்தகராறினால் ஒருவர் அடித்துக் கொலை
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23) இரவு குருநாகல் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெல்லவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பணத்தகராறு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்தவருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையில் நிலவிய பணத்தகராறு முற்றியதே இந்த கொலைக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை குருநாகல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |