யாழில் சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி!
Jaffna
Accident
Death
By Theepan
யாழில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (06.05.2026) முற்பகல் யாழ். வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், யாழ் . 10 ஆம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த 21வயதுடைய சிறிரமனன் நிதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபரை மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி