காரை வழிமறித்து வாள்வெட்டு தாக்குதல் - யாழில் சம்பவம்..!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kiruththikan
இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட, பனிப்புலத்தில் நேற்று நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரு உந்துருளியில் வந்த மூவர், கார் ஒன்றை வழிமறித்து தாக்குதல் நடத் திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
25 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது
குறித்த வாள்வெட்டு தாக்குதலில் பண்ணாகத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த இளவாலைப் காவல்துறையினர் 25 மற்றும் 30 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி