கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kiruththikan
கொட்டாஞ்சேனை - ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்பு தொடரொன்றுக்கு அருகில் நபரொருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ஆமர் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்