கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Raghav
எட்டிபொல, கல்தொர ஹேன பகுதியில் கூரிய ஆயுததத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யடவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (13.07.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 45 வயதுடைய வாலவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதோடு, கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய நபர் 60 வயதுடையவர் எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யடவத்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி