பதினாறு வயது சிறுவனின் விபரீத செயற்பாடு- ஸ்தலத்திலே பலியான நபர்!
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாக 16 வயது சிறுவன் செலுத்திச் சென்ற அதிசொகுசு மகிழுந்து , வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும், மகிழுந்து ஒன்றையும் மோதியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த மகிழுந்து வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உந்துருளியொன்றில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஏனைய வாகனங்களில் பயணித்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மஹபாகே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You may like this