மாடு ஒன்றினால் ஏற்பட்ட மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
Police
Murder
Hambantota
Attack
SriLanka
By Chanakyan
ஹம்பாந்தோட்டை - ரிஜ்ஜவில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மிரிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பயிர்ச்செய்கை காணிக்குள் மாடொன்று புகுந்து சேதப்படுத்தியமை தொடர்பில் ஏற்பட்ட கைகலப்பினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்யும் பொருட்டு ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.