பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
விசேட இறக்குமதி
இதற்கமைவாக 10 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரியை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது போதியளவு வெங்காயம் கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,கைத்தொழில்துறையினருக்கு தேவையான தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறையும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் உற்பத்தி
தேங்காய் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதிக்கான பாரிய தேவையினால் தேங்காய் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேவைக்கேற்ப விநியோகத்தை வழங்குமாறு தொழில் அதிபர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேங்காய் பால் இறக்குமதிக்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கான பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |