தொடருந்து நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04.11.2024) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05.11.2024) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த (30)ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
தொழில் ரீதியாக நடவடிக்கை
இந்நிலையில், துறைசார் அமைச்சரின் தலையீட்டினால் இன்று நிலைய அதிபர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் நாளை முதல் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிலைய அதிபர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைப்பளு மிக்க தருணத்திலும் தமது பிரச்சினைகளுக்கு அமைச்சர் தலையீடு செய்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது கமிட்டிகளை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பவதற்கு தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |