நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள் - காவல்துறை எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Festival Money Online business
By Abi Apr 06, 2026 09:47 AM GMT
Report

நாட்டில் இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழி பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார கஷ்டங்கள் காரணமாகவும், உடனடி நிதி இலாபங்களை எதிர்பார்த்தும் இவ்வாறான மோசடிகளில் பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாக கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அவதானிக்கப்பட்டுள்ளது.

வீழ்த்தப்படும் தலைகள் - IRGC உளவுத்துறைத் தலைவர் பலி - உறுதி செய்த ஈரான்

வீழ்த்தப்படும் தலைகள் - IRGC உளவுத்துறைத் தலைவர் பலி - உறுதி செய்த ஈரான்

குறுஞ்செய்திகள் ஊடான மோசடிகள்  

இது குறித்து காவல்துறை தெரிவிக்கையில், புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்கள் கொள்வனவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக பொதுமக்கள் அதிகளவில் இணையதளங்களைப் பயன்படுத்துகின்ற நிலையில், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், தரவுகளைத் திருடி பணத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடிகள் - காவல்துறை எச்சரிக்கை | Online Money Transfers During The New Year Period

அதன்படி, புத்தாண்டு சலுகைகள் மற்றும் பரிசுகள் தொடர்பான போலி அறிவிப்புகள், போலியான வங்கி இணையதளங்கள் மற்றும் வங்கி செயலிகளைப் புதுப்பிக்குமாறு கோரும் செய்திகள், போலியான கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யத் தூண்டுதல், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் என்பன குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகள் ஊடாக தனிப்பட்ட தரவுகளைப் பெற்று, வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை திருடும் அபாயம் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, இணையதளம் ஊடாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போதும், அறிமுகமில்லாத இணைய இணைப்புகளை அழுத்தும் போதும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.     

இலங்கை - அமெரிக்க இடையே இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

இலங்கை - அமெரிக்க இடையே இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026