நிகழ்நிலை கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்
நிகழ்நிலை (Online) முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக ( Gayantha Karunathilaka) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், விண்ணப்பதாரிகள் சரியான தரவுகளை சமர்ப்பிக்காத காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விண்ணப்பதாரிகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிகழ்நிலையில் கடவுச்சீட்டு பெறும்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் சரியான தகவல்களை உள்ளிடாததால் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
சிலர் பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களை உள்ளீடு செய்துள்ளதுடன் இதன் காரணமாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |