ரத்து செய்யப்படும் சேவைக் கட்டணங்கள்! ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு
அரசு நிறுவனங்களில் மின்னணு கட்டணங்களுக்காக அறவிடப்படும் அனைத்து சேவைக் கட்டணங்களும் ஜனவரி 1, 2026 முதல் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுதிட்ட உரையின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவிப்பை விடுத்து்ளளார்.
இந்த புதிய திட்டம், குடிமக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் அணுகக்கூடியதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.
QR பரிவர்த்தனை
அதன்படி, பண அறவீடு இல்லாத கட்டண செலுத்துகையை மேலும் ஊக்குவிக்க, ரூ. 5,000 க்குக் குறைவான QR குறியீடு பணம் செலுத்துகையை இலவசமாக செயல்படுத்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் கீழ் அரசாங்கம் ஒரு சிறப்பு ஏற்பாட்டை அறிமுகப்படுத்தும்.

இந்த நடவடிக்கை சில்லறை விற்பனை மற்றும் அரசாங்க சேவைகளில் QR அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |