இலங்கைக்கும் சீனாவுக்கும் போர் மூண்டுள்ளதா? முன்னாள் அரச தலைவர் கேள்வி
இலங்கையில் பரிசோதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட சீன உரத்தை மீண்டும் பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் தேவையில்லை என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் உள்ளூர் நிபுணர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையே போர் போன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் தான் அதை தீர்க்க மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவைப்படுகிறது.
எனினும், இவ்வாறான விடயங்களில் மூன்றாம் தரப்பு தேவையில்லை என முன்னாள் அரச தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டில் போர் நடக்கும் போது, அல்லது இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தான், மூன்றாம் தரப்பு தலையிட்டு சமாதானப்படுத்தும்.
இது உர பிரச்சினை, இது நாங்கள் வழக்கமாக வாங்கும் ஒன்று. இதற்கு மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையில்லை என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.