கொழும்பில் அரசாங்கம் - எதிர்க்கட்சிகளின் போட்டிக்கு வருகிறது முடிவு
கொழும்பு (Colombo) மாநகர சபையின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நியமிப்பதற்காக திறந்த தேர்தல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறித்த தேர்தலானது, ஜூன் இரண்டாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் (Colombo Municipal Council) எந்தவொரு கட்சியும் ஐம்பது வீதத்திற்கு மேல் வாக்கு வீதத்தைப் பெறவில்லை என்பதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ தேர்தல் நடத்தப்பட்டு, இந்தப் பதவிகளுக்கான தேர்வுகள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மை
அதன்படி, இந்தத் தேர்தலில், பெரும்பான்மையைக் காட்டும் அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர்களோ முதல்வர் மற்றும் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், கொழும்பு மாநகர சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
