சிறிலங்காவின் எல்லை அபாய மதிப்பீட்டு மையம் திறந்து வைப்பு
சிறிலங்காவின் எல்லை அபாய மதிப்பீட்டு மையத்தை, அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
எல்லை இடர் மதிப்பீட்டு மையமானது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிலங்காவின் ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவத்தின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடனும், அஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லை இடர் மதிப்பீட்டு மையமானது சிறிலங்காவின் எல்லை முகாமைத்துவ முகவர் நிறுவனங்களுக்கு அவர்களின் செயற்பாடுகளை எளிதாக்கும் வகையில், நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு புதிய புலனாய்வு தளத்தை இது எளிதாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளைக் கண்டறிந்து பதிலளிக்கும் போது சட்டப்பூர்வமான பயணம் மற்றும் வர்த்தகத்தை செயற்படுத்த இது ஒத்துழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளைக் கடக்கும் மக்கள் மற்றும் சரக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, எல்லை தாண்டிய அபாயங்களைக் கண்டறிவதற்காகவும், பல அமைப்புகளை இயக்குவதன் மூலம் ஏற்படும் செலவுகளைச் சேமிக்கும் நடவடிக்கையாகவும் நாடுகள் ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவத்தின் அமைப்புகளுக்கு மாறியுள்ளன.
சிறிலங்காவில் எல்லை தாண்டிய நிறுவனங்களை உள்ளடக்கிய மொத்தம் 11 நிறுவனங்கள் எல்லை இடர் மதிப்பீட்டு மையத்தின் இன் பங்குதாரர்களாக உள்ளன.
மேலும் இது வலுவான நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் மூலம் மேம்பட்ட எல்லை நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக 24 மணித்தியாலமும் வாரத்தின் 7 நாட்களும் இயங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.