இந்தியப்படையின் நித்தகைக்குள முற்றுகை! எப்படித் தப்பினார் பிரபாகரன்?
இந்தியப் படையினரின் நித்தகைக்குள முற்றுகை நடவடிக்கை என்பது விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அழிவின் விளிம்புவரை அவர்கள் சென்று திரும்பிய ஒரு வரலாற்றுச் சம்பவம்.
இந்தியப் படையினரிடம் இருந்து தலைவர் பிரபாகரன் மயிரிழையில் தப்பிய பல சம்பவங்கள் அந்த முற்றுகையின் போது நடந்திருந்தன.
இந்தியப் படையினர் தன்னைச் சுட்டுக்கொலைசெய்யும் ஒரு நிலை ஏற்பட்டால் தனது பிணம் கூட இந்தியப்படையினரிடம் அகப்படக்கூடாது என்பதற்காக, ஒரு மெய்ப்பாதுகாவலர் ஒருவரை பெற்றோல் 'கானு'டன் எந்த நேரமும் தன்னருகே தலைவர் பிரபாகரன் வைத்திருக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுத்த ஒரு முற்றுகை அது.
மயிர் கூச்சொரியும் வீர சாகசங்களை வெளிப்படுத்திய அந்த முற்றுகைச் சண்டைகள் பற்றியும், அந்த முற்றுகைக் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும்,
அந்தச் சவால்களை தலைவர் முறியடித்த சில வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியும் மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
