பிரபாகரனைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் செக் மேட்

LTTE Leader Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Apr 22, 2024 07:51 AM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

இந்தியப் படையினரின் பாரிய முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனும், மேலும் சில நூறு போராளிகளும் இருப்பது பற்றிய செய்தி இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு இந்தியப் படைத்துறைத் தலைமையினால் அனுப்பிவைக்கப்பட்டது.

சுமார் முப்பதினாயிரம் படைவீரர்களைக் கொண்ட இந்தியப் படையினரின் முற்றுகைக்குள் புலிகளின் தலைவர் அகப்பட்டு இருப்பதாகவும், ஒப்பரேசன் செக் மேட் என்று பெரிடப்பட்டிருந்த அந்த முற்றுகைக்கு இந்தியாவின் வான் படை மற்றும் கடற்படையும் உபயோகிக்கக்படுவதாகவும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

வளையங்கள்

இந்தியப் படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள்.

ஏதாவது ஒரு வளைத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். இந்த வியூகம் பற்றியும் இந்தியப் பிரதமருக்கு விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

பிரபாகரனைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் செக் மேட் | Operation Checkmate Against Prabhakaran

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. புலிகளால் அரசியல் ரீதியாகத் தனக்கேற்பட்டிருந்த தலையிடி தீர்ந்துவிடப்போகின்றது என்கின்ற நிம்மதி ஒரு பக்கம்.

புலிகளுடன் நடைபெற்ற யுத்தம் காரணமாக இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களினால் இந்தியாவிற்கு ஏற்பட்டிருந்த இழுக்கை நிவர்த்திசெய்துவிடலாம் என்கின்ற திருப்தி ஒருபக்கம். சந்தேசத்தில் துள்ளிக்குதித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கான தனது அனைத்து அலுவல்களையும் இரத்துசெய்யும்படி தனது காரியதரிசியிடம் கூறிவிட்டு வன்னியில் இருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்.

களமுன்னேற்றங்கள் பற்றி தனக்கு உடனுக்குடன் அறிவிக்கவேண்டும் என்று, இந்தியப் படைத் தளபதிகளிடமும், இந்தியத் தூதர் தீட்சித்திடமும், அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியப் படைகளிடம் பிடிபட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்கின்ற செய்தியை ஊடகங்களுக்கு தனது வாயால் கூறவேண்டும் என்கின்ற ஆர்வம் அவரிடம் காணப்பட்டது.

இந்தியத் தலைவரின் நிலை இவ்வாறு இருக்க, விடுதலைப் புலிகளின் தலைவரின் நிலை எப்படி இருந்தது? அந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரது உணர்வுகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றி கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் தனது கட்டுரை ஒன்றில் உணர்ச்சிபட எழுதியிருந்தார்.

தலைவர் பிரபாகரன்

கவிஞர் வாஞ்சிநாதன் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து செயற்பட்டவர். விடுதலைப் போராட்டத்திற்காகவும், விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளுக்காகவும் பல காரியங்களை ஆற்றியிருந்தவர்.

உதாரணத்திற்கு இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு என்றழைத்திருந்த இந்தியத் தலைமை அவரை புது டெல்லியிலுள்ள அசோக்கா ஹோட்டலில் தடுப்புக்காவலில் வைத்து வஞ்சித்தது.

அப்பொழுது புலிகளின் தலைவரை இந்தியா உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று கோரி ஈழ தேசமே கிழர்ந்தெழுந்தது. தலைவரை விடுவிக்கவேண்டும் என்று கோரி பாரிய ஒரு பொதுக்கூட்டம் யாழ் கோட்டை இராணுவ முகாமின் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரபாகரனைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் செக் மேட் | Operation Checkmate Against Prabhakaran

அக்கூட்டத்தில் கவிஞர் காசி ஆணந்தன், லோரன்ஸ் திலகர், தியாகி திலீபன் உட்பட பலர் உரை நிகழ்த்தியிருந்தார்கள். சரித்திரப் பிரசித்திவாய்ந்த அந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து தலைமைதாங்கி நடாத்தியிருந்தவர் கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்திகைக்குள முற்றுகையின் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது நிலை, மன நிலை எவ்வாறு இருந்தது என்பது பற்றி கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் விளக்கியிருந்தார். 

8.04.2004 அன்று வீரகேசரியில், ‘இந்திய அமைதிகாக்கும் படையின் நித்திகைக்குள முற்றுகையை உடைத்தெறிந்த பிரபாகரன்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த அந்தக் கட்டுரையில் நித்திகைக்குளச் சம்பவங்கள் பற்றி அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

முற்றுகை

‘ தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட எல்லா முற்றுகைகளிலும் நித்திகைக்குளம் முற்றுகைதான் மிகப் பெரிய முற்றுகை.கடல் – தரை-ஆகாயப் படைகள் இணைந்து நடாத்திய முற்றுகை அது.

முற்றுகைச் செய்தி “றோ”வுக்கு அறிவிக்கப்பட்டதும் ‘ஓ.. பிரபாகரன் தொலைந்தார்.. இனி ஈழப்போராட்டம் முடிந்துவிடும்..’ என்று நினைத்த றோவின் முக்கிய அதிகாரிகள் சிலர் உடனடியாக டெல்லியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டார்கள்.

சென்னை திருவான்மையூரில் வீட்டுக் காவலில் இருந்த புலிகளின் முன்னாள் யாழ் மாவட்டத்தளபதி கேணல் கிட்டுவை றோ’ வும், கியூ (Q-Branch) பிரிவின் சில அதிகாரிகளும் நள்ளிரவில் சென்று சந்தித்தார்கள்.

‘உங்கள் தலைவர் நித்திகைக் குளத்தில் மூன்று வலைப்பின்னல் முற்றுகைக்குள் திணறிக்கொண்டிருக்கின்றார். அவர் சில ஆயுதங்களை மட்டும் பத்திரிகையாளர்கள் முன்பாக எம்மிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்துப் போடுவதாக இருந்தால் எமது படையினர் உடனடியாக முற்றுகையை நீக்கிவிடுவார்கள்.

பிரபாகரனைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் செக் மேட் | Operation Checkmate Against Prabhakaran

இல்லையேல் 200 தொன்களுக்கு மேல் வெடிபொருட்களை நிரப்பிய பொம்பர்களும், ஹெலிகொப்டர்களும் -முப்பதினாயிரம் படையினரும் புலிகளின் தலைவரையும், அவரைக் காத்துவரும் புலிகளையும், நித்திகைக் குளக் காட்டையும் பதினைந்து நிமிடங்களில் அழித்துச் சாம்பலாக்கிவிடுவார்கள்.’

‘பின்னர் பிரபாகரன் உடலைக்கூட உங்களால் பார்க்கமுடியாது.’ ‘நாங்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்களே அவருடன் பேசிச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

கிட்டு இதைக்கேட்டு அதிர்ந்துவிட்டார். உடனே வான் அலை ஊடாகப் பிரபாகரனைத் தொடர்புகொண்டார். றோவும், கியூ பிரிவும் கூறியதை அப்படியே தலைவரிடம் ஒப்புவித்தார். ஆதற்குப் பிரபாகரன் என்ன சொன்னார் தெரியுமா?

தொடரும்….

பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி

பிரபாகரனின் மரணச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜீவ் காந்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026