ஒபரேசன் சுமந்திரன் நீக்கம்..! தமிழரசுக் கட்சியில் கலகக் குரல்கள்
தமிழரசுக் கட்சியில் இருந்து எம்.ஏ. சுமந்திரனை ஓரம் கட்டும் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சிக்குள் கலகக் குரல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான கலகக் குரல்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் அரசியல் ஓய்வுக்குப் பின்னர் அதன் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது யார் என்ற ஒரு போட்டியின் அங்கமாகவே தெரிகின்றது.
ஒரு காலத்தில் தமிழ் தேசிய பரப்பில் அரசியல் தளபதியாக இருந்த சம்பந்தன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 90 வயது மூப்பு நிலையை அடைகின்றார்.
சம்பந்தனின் மூப்பு நிலை
அந்த மூப்பு நிலை அவரை அரசியல் களத்தில் முறையாக செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பந்தனை பொறுத்தவரையில் ஏற்கனவே சுமந்திரனின் உதவியுடன் தான் இராஜதந்திர சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு சம்பந்தனை பிரதியீடு செய்யக்கூடிய ஒரு தலைவராக சுமந்திரன் பதியமிடப்படுவது தெரிய வருகின்றது.
இவ்வாறாக தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் ஏற்பட்டுள்ள கலகக் குரல்கள் - அதன் பின்னணி தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,