சுமந்திரனின் முடிவினால் கட்சிக்குள் பூகம்பம்..!

Sri Lankan Tamils TNA M. A. Sumanthiran
By Vanan Oct 30, 2022 03:37 PM GMT
Report

எம்.ஏ. சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என அக்கட்சியினுடைய கொழும்புக் கிளைத் தலைவரும், அதிபர் சட்டத்தரணியுமான கே.பி.தவராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தன்னிச்சையான  முடிவுகள்

சுமந்திரனின் முடிவினால் கட்சிக்குள் பூகம்பம்..! | Sumandrans Decision Affected Party

கட்சி முடிவு என்பது மத்திய குழு அழைக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும். அந்த முடிவே இறுதியான முடிவாக இருக்கும். ஆனால் சுமந்திரனுடைய கருத்துக்கள் இப்போது தன்னிச்சையாக அமைகிறது. அது கட்சியின் முடிவு அல்ல.

இவ்வாறான முடிவுகள் கட்சிக்கு மட்டும் பாதிப்பு அல்ல. தமிழ் மக்களுக்கும் மண்ணுக்கும் நமது நிலத்திற்கும் மொழிக்கும் இது பாதிப்பு.

22ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் அண்மையில் வாக்கெடுப்புக்கு விட்டபோது சுமந்திரன், வாக்களிக்காமல் வெளியேறிச் சென்று விட்டார். இந்த முடிவு கட்சியில் எப்போது எடுக்கப்பட்டது. அவரே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதிபருக்கான தெரிவு நாடாளுமன்றில் இடம்பெறும்போது வாக்களிப்பில் நடுநிலை வகிப்பது முதுகெலும்பு இல்லாதவர்களின் செயல் என சுமந்திரன் கூறினார். அவ்வாறு கூறியவர் 22ஆவது சட்டத் திருத்ததிற்கான வாக்களிப்பை புறக்கணித்தார். அதிபர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்ப்பதற்காகவே சுமந்திரன் 22ஆவது சட்டத்திருத்ததிற்கான வாக்களிப்பை புறக்கணித்தார்.

சம்பந்தன் எப்போது விலகுவார், அந்தக் கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை.

கட்சிக்குள் கொள்கைகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறுமாக இருந்தால், நான் கட்சியை விட்டு வெளியேறுவேன். கட்சித் தலைமை சரியான தீர்மானங்களை எடுக்கா விட்டால், இவ்வாறு பலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, கட்சியையும், மக்களையும் திசை திருப்பி விடுவார்கள்.

கூட்டுப் பொறுப்பு

சுமந்திரனின் முடிவினால் கட்சிக்குள் பூகம்பம்..! | Sumandrans Decision Affected Party

கட்சியில் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்தக் கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தான், கட்சி கீழ் நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாக கூறிக் கொண்டு வருகின்றேன்.

இது தனிப்பட்ட கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியினுடைய அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கட்சித் தலைமையை மதிக்க வேண்டும்.

இந்த மண்ணுக்கும் என்னுடைய தாய் மொழிக்கும் என்னால் செய்யக்கூடிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர வேறெந்த நோக்கமும் தனிப்பட்ட இலாபமும் எனக்கு கிடையாது.

என்னுடைய சொத்துக்களை கௌரி சங்கரி தவராசா எனும் அறக் கட்டளை மூலம் மக்களுக்காக வழங்கப்போகின்றேன்.

தேசிய பட்டியல் விவகாரம்

சுமந்திரனின் முடிவினால் கட்சிக்குள் பூகம்பம்..! | Sumandrans Decision Affected Party

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய பட்டியல் தருமாறு நான் கேட்கவில்லை. ஆனால் தேசியப் பட்டியில் உள்வாங்கப்பட்டேன். தேசிய பட்டியலில் எனது பெயர் முதலாவதாக காணப்பட்டது. என்றாலும், அடுத்த நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தை அழைத்து, அம்பிகா சற்குணநாதனுடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

பின்னர் சுமந்திரன், சம்பந்தனை சந்தித்து ஒரு முடிவு எடுத்து தேசிய பட்டியலை அம்பாறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தவராசா கலையரசனுக்கு கொடுப்பதாக தீர்மானித்து அதனையும் ஊடகங்களை அழைத்து அறிவித்தார்.

மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு தமிழ் தேசிய உணர்வுள்ள ஒருவர் தலைவராக வர வேண்டும்”- என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026