காவல்துறையினரின் விசேட நடவடிக்கை! கடமையில் ஈடுபடுத்தப்படும் 10,000 அதிகாரிகள்
பாடசாலை விடுமுறைக் காலத்தில், கவனயீனமாக அல்லது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 போக்குவரத்துப் காவல்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
வீதிப் பாதுகாப்பு
அபாயகரமான வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், வீதிப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பொதுமக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கவனயீனமாக வாகனம் செலுத்துவதால் சிறுவர்கள் மற்றும் ஏனைய அன்புக்குரியவர்கள் உயிர்களை இழப்பதையோ அல்லது தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிவதையோ தடுப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றும் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |