ஜெலென்ஸ்கி - புடின் சந்திப்புக்கு அதிரடி நிபந்தனைகளை முன்வைக்கும் ரஷ்யா
சில நிபந்தனைகளின் அடிப்படையில், ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்திக்க வாய்ப்பிருப்பதாக சரவ்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பார்வையில் என்ன நிபந்தனைகள் என்பதை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் குறிப்பிடவில்லை.
பேச்சுவார்த்தை
கடந்த 2019 டிசம்பர் மாதத்திற்கு பின்னர் ஜெலென்ஸ்கியும் புடினும் நேரடியாக சந்தித்ததும் இல்லை.
இந்த வாரம் துருக்கியில் தன்னைச் சந்திக்குமாறு ரஷ்ய ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி சவால் விடுத்திருந்தார்.
ஆனால் அதற்கு பதிலாக புடின் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்களைச் சந்திக்க உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்பினார்.
நேருக்கு நேர்
மார்ச் 2022 இற்குப் பிறகு முதல் இருதரப்பு, நேருக்கு நேர் பேச்சுவார்த்தையானது வெள்ளிக்கிழமை துருக்கியில் நடந்தது.
தொடர்புடைய பேச்சுவார்த்தையில் புடின் மற்றும் ஜெலென்ஸ்கி சந்திப்பு குறித்த பிரச்சினையை எழுப்பியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால், இரு தரப்பினரும் நிபந்தனைகள் வடிவில் சில முடிவுகளை எட்டுவதன் விளைவாக மட்டுமே அத்தகைய சந்திப்பு சாத்தியம் என்று ரஷ்யா கருதுவதாக தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, பிரதிநிதிகள் குழுக்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய ஆவணங்களில் கையொப்பமிடும் போது, உக்ரேனிய தரப்பிலிருந்து இந்த ஆவணங்களில் யார் உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திடுவார்கள் என்பதுதான் எங்களுக்கு இருக்கும் முக்கிய மற்றும் அடிப்படையான கேள்வி என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
