இதுவே சாத்தியமான ஒரே வழி! நாமலின் இறுதி நம்பிக்கை
நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
UNP - SJB கூட்டணி
“பிளவுகள் நாட்டை பலவீனப்படுத்துவதை விட அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று எனது தந்தை எப்போதும் நம்பினார். எனவே, UNP மற்றும் SJB ஒன்றிணைவதற்கான முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இருப்பினும், நான் அந்தக்கட்சிகளில் உறுப்பினராக இல்லாததால், இது நடக்குமா என்று என்னால் சொல்ல முடியாது,” என்று நாமல் கூறியுள்ளார்.
சிறந்த எதிர்காலம்
இதேவேளை, தேசிய நலனுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் கூட்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

அத்தகைய ஒத்துழைப்புதான் தேசத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |