அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை!
Samagi Jana Balawegaya
Lakshman Kiriella
SriLanka
Partliament
By Chanakyan
எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக கூறினார்.
இதேவேளை கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசி திட்டம் குறித்து அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக் கொண்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்