22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்காத மூன்று எதிர்க்கட்சியினர்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் 158 வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், எதிராக 63 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களிப்பில் இருந்து விலகியவர்கள் எவரும் இல்லை. எனினும் எதிர்க்கட்சியின் 66 உறுப்பினர்களில் மூவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ரவி கருணாநாயக்க - பைசர் முஸ்தபா
அவர்களில் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, பைசர் முஸ்தபா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக ஆகியோர் அடங்குகின்றனர்.

இதனையடுத்து, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் தேவையான சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |